கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 67 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த அலையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்பும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. கொரோனா 2-வது அலையே கட்டுக்குள் வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேப்பனப்பள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story