திருச்சியிலிருந்து சென்னைக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கம்


திருச்சியிலிருந்து சென்னைக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2021 11:56 PM IST (Updated: 20 Jun 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியிலிருந்து சென்னைக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு முதல் மீண்டும் ஓடத் தொடங்கியது.

திருச்சி, 
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக தென்னக ரெயில்வே கடந்த வாரம் முக்கிய ரெயில்களின் இயக்கத்தை திடீரென ரத்து செய்து அறிவித்தது. அதன் பின்னர் கொரோனா தாக்கம் ஓரளவு குறைய தொடங்கியதால் ஜூன் 20-ந் தேதி முதல் முக்கிய ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்தது.இந்த அறிவிப்பின் படி திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நேற்று இரவு முதல் மீண்டும் ஓடத் தொடங்கியது. குறைந்த அளவிலான பயணிகளுடன் நேற்று இரவு 10.30 மணிக்கு இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

Next Story