பெற்றோரை இழந்த சகோதரிகள், கலெக்டரிடம் கோரிக்கை


பெற்றோரை இழந்த சகோதரிகள், கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2021 2:30 AM IST (Updated: 22 Jun 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரை இழந்த சகோதரிகள், கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் இன்னிசை நகரை சேர்ந்த அருள்முருகன்-பானுப்பிரியா தம்பதியின் மகள்களான சுபேதா(வயது 15), சந்தியா(14) ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது சுபேதாவும், சந்தியாவும் கலெக்டரிடம் கூறுகையில், எங்களது தந்தை அருள்முருகன் கடந்த 2008-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தாய் பானுப்பிரியாவும் கடந்த மாதம் 10-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அனாதையான நாங்கள் தற்போது எனது தந்தையின் பெற்றோர் பராமரிப்பில் இருந்து வருகிறோம். இந்த நிலையில் எங்களது தாயின் இறப்பு சான்றிதழும், எங்களுக்கு வாரிசு சான்றிதழும் வாங்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தாத்தா, பாட்டிக்கும் வயதாகி விட்டதால் எங்களை பராமரிக்க, அவர்களிடம் வசதி இல்லை. இதனால் எங்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்கவும், மேல்படிப்பிற்கு உதவி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டருக்கு நன்றி தெரிவித்த அந்த சகோதரிகள் வீடு திரும்பினர்.

Next Story