கஞ்சா கடத்திய சிறுவன் கைது


கஞ்சா கடத்திய சிறுவன் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 10:06 PM GMT (Updated: 2021-06-22T03:36:29+05:30)

திசையன்விளையில் கஞ்சா கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட ¼ கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றி, இதுதொடர்பாக 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story