மோகனூர் அருகே சரக்கு ஆட்டோ-மொபட் மோதல்; தொழிலாளி பலி-டிரைவர் கைது


மோகனூர் அருகே சரக்கு ஆட்டோ-மொபட் மோதல்; தொழிலாளி பலி-டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 7:09 PM GMT (Updated: 2021-06-23T00:39:18+05:30)

மோகனூர் அருகே சரக்கு ஆட்டோ-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

மோகனூர்:
தொழிலாளி பலி
கரூர் மாவட்டம் தாளவாபாளையம் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது மொபட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வழியில் வாங்கல் ரோடு அருகே காக்காத்தோப்பு பிரிவு சாலையில் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ, மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் காளிமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
ஆட்டோ டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பின்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பின்னர் விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ டிரைவரான கீழபேட்டப்பாளையத்தை சேர்ந்த ராகவனை (32) கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story