பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது
தாயில்பட்டி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். இதையடுத்து ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் அழகுஜோதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் அலெக்ஸ் (வயது 37) என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து விற்பனைக்காக 8 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அலெக்சை கைது செய்தனர்.
Related Tags :
Next Story