இன்றும், நாளையும் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு


இன்றும், நாளையும் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 23 Jun 2021 4:52 AM GMT (Updated: 23 Jun 2021 4:52 AM GMT)

இன்றும், நாளையும் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் இதுநாள் வரை 17 லட்சத்து 58 ஆயிரத்து 187 முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 4 ஆயிரத்து 804 2-வது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 991 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வுசெய்ததில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலத்தை கடந்து சுமார் 89 ஆயிரத்து 500 பேர் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சுமார் 59 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலத்தை கடந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

இவர்களில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 23 (இன்றும்), 24 (நாளையும்)-ந்தேதிகளில் மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine-centers/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story