கொரோனா எதிர்ப்பாற்றல் பொதுமக்களிடம் உள்ளதா


கொரோனா எதிர்ப்பாற்றல் பொதுமக்களிடம் உள்ளதா
x
கொரோனா எதிர்ப்பாற்றல் பொதுமக்களிடம் உள்ளதா
தினத்தந்தி 23 Jun 2021 9:19 PM IST (Updated: 23 Jun 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா எதிர்ப்பாற்றல் பொதுமக்களிடம் உள்ளதா

கோவை

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களிடையே நோய்த் தொற்று எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளது குறித்து சுகாதாரத் துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் கட்ட ஆய்வும், நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 2-ம் கட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கோவையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வில் 22.15 சதவீத நபர்களுக்கும், 2-ம் கட்ட ஆய்வில் 20 சதவீத நபர்களுக்கும் கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பாற்றல் உருவாகியிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 3-வது கட்ட ஆய்வு விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது

பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பாற்றல் உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது. கோவையில் முதல், 2-ம் கட்ட ஆய்வுகளில் மாநகராட்சி, ஊரகப் பகுதிகள் என 42 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. 

இதில் ஒவ்வொரு இடத்திலும் தலா 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் 3-வது கட்ட ஆய்வினை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே விரைவில் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story