கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊசி போட்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story