ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஆட்டோ டிரைவர்
கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார் (வயது 47), ஆட்டோ டிரைவர். இவருக்கு புஷ்பரதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டோ தொழில் முடங்கியது. இதனால் வசந்தகுமார் வருமானம் இல்லாமல் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் வசந்தகுமாரால் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் மன ்அழுத்தத்தில் இருந்து வந்தார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்த வசந்தகுமார் விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story