அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் சாவு; கொலை வழக்காக மாற்றம்

நெல்லை அருகே அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் இலங்கை அகதிகள் முகாமுக்குள் கடந்த 16-ந்தேதி ஒரு கும்பல் நுழைந்தனர். அங்குள்ள ஒரு வீட்டின் கதவை தட்டி ரகளை செய்தனர். அவர்களை தட்டிக்கேட்ட பெருமாள் (வயது 65) மற்றும் சின்னத்துரை (60) ஆகிய 2 பேரை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். காயம் அடைந்த 2 பேரும் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் அங்குள்ள மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை ஏற்கனவே முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story