மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அரசு ஊழியர் சாவு


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 28 Jun 2021 1:28 AM IST (Updated: 28 Jun 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு ஊழியர் உயிரிழந்தார்.

ஆவூர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி ஊராட்சி பாத்திமா நகரை சேர்ந்தவர் வெங்கட். இவரது மகன் பழனிச்சாமி (வயது 40). இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு வேளாண்மை அலுவலகத்தில் அலுவலக பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் பாத்திமா நகரில் இருந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த அப்பாஸ் மகன் பஷீர்அலி (25) என்பவர் தனது தங்கை ரம்ஜான் பேகம் (23), ரம்ஜான் பேகத்தின் மகன்கள் ஹபீஷ் (4), முகமது அக்பர் (3) ஆகியோருடன் திருச்சியிலிருந்து இலுப்பூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழனிச்சாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. இதில், 5 பேரும் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்த பழனிச்சாமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கும், மற்ற 4 பேரையும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி நேற்று அதிகாலை உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story