நல்லூர் போலீஸ் நிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

நல்லூர் போலீஸ் நிலையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி
நல்லூர்:
கொரோனா வைரஸ் 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தததால் வீட்டில் முடங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நல்லூர் போலீஸ் நிலையம் சார்பில் தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பு, முககவசம் வழங்கப்பட்டது. காசி பாளையம் சோதனை சாவடியில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன் வழங்கினார். அப்போது சப்-இன்ஸ் பெக்டர் இளஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் பழனிசாமி, ஏட்டு யுவராஜ், தண்டுலிங்கம் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக அவர்கள் வசிக்கும் வீட்டிற்கே கொண்டு செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு போலீசார் வழங்கினர். மொத்தம் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story