அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி சாவு

சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்தார். மாணவியின் தங்கையும், தோழியும் உயிர் தப்பினர்.
க.பரமத்தி
பள்ளி மாணவி சாவு
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்த நாட்ராயன் மகள் சவுந்தர்யா (வயது 15). இவர், எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை சவுந்தர்யா, அவரது தங்கை ஜோதி, தோழி நந்தினி ஆகியோர் வீட்டின் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு ஓடி வந்து சிறுமிகள் ஜோதி, நந்தினி ஆகிய 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், 1 மணி நேர ேதடலுக்கு பிறகு சவுந்தர்யாவை பிணமாகத் தான் மீட்க முடிந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story