ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2021 1:57 AM IST (Updated: 30 Jun 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களக்காடு:
களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். ஜார்ஜ் வில்சன் முன்னிலை வகித்தார். 
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.  தமிழகத்திற்கு போதியளவு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், வட்டார தலைவர்கள் தனபால், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story