புதிதாக 72 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,536 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,429 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 529 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 529 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 170 ேபரும், சிகிச்சை மையங்களில் 38 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் லட்சுமி நகர், மாடர்ன் நகர், லட்சுமி நகர், பாண்டியன் நகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலப்பட்டியலில் 72 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு சதவீதம் 2 ஆக உள்ளது.
Related Tags :
Next Story