ஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.15¾ லட்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.15¾ லட்சம் கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உண்டியல்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பெரிய பெருமாள் கோவில், சக்கரத்தாழ்வார் கோவில், பெரியாழ்வர் கோவில் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உண்டியல்கள் ஆண்டாள் ேகாவில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் காணிக்கைகள் எண்ணப்பட்டன. ரூ. 15 லட்சத்து 83 ஆயிரத்து 297 இருந்தது.
உதவி ஆணையர் கணேசன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story