மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு

திசையன்விளை அருகே மோட்டார்சைக்கிள் மோதி பெண் இறந்தார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர், மனைவி ஏசுமாரி (45) மற்றும் மகளுடன் தோட்டத்திற்கு சென்று விட்டு சாலை ஓரத்தில் அவர்களுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் அருகே நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதில் முருகன், அவரது மனைவி ஏசுமாரி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். ஏசுமாரி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முருகன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து ஏசுமாரி மீது மோதி விட்டு மோட்டார்சைக்கிளில் நிற்காமல் சென்றவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story