சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிய உதவும் கருவி

பயோமார்க்கரை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. இந்த பயோமார்க்கர் சர்க்கரை வியாதி எவ்வாறு ஒருவரை தாக்குகிறது என்பதை கண்டறிய உதவும்.
தஞ்சாவூர்,
சாஸ்த்ராவின் நானோ டெக்னாலஜி மற்றும் உயர் பயோ மெட்டிரியல் மையம் எலக்ட்ரிக்கல், எலக்ரானிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி துறை ஆகியவை இணைந்து கடந்த 2014-ம் ஆண்டு பயோமார்க்கரை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. இந்த பயோமார்க்கர் சர்க்கரை வியாதி எவ்வாறு ஒருவரை தாக்குகிறது என்பதை கண்டறிய உதவும். இந்த ஆராய்ச்சி மின் வேதியியல் பயோ சென்சாரை கண்டுபிடிக்க வழிவகுத்தது. இந்த பயோ சென்சார்கள் ரத்ததின் பிளாஸ்மாவில் உள்ள மெத்தைல் கிளையாக்சால்-ஐ விரைவில் கண்டறிய உதவும். இவ்வகை பயோ சென்சார்கள் நவீன வகையை சார்ந்தவை. இவை சர்க்கரை வியாதி மற்றும் அதன் தொடர்பான சிக்கல்களை கண்டறிய உதவும்.
டாக்டர் ஜான் பாஸ்கோ பாலகுரு மற்றும் டாக்டர் வேதாந்தம் ஸ்ரீனிவாசன் இணைந்து இரண்டாண்டுகள் இந்த பயோ சென்சாரின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் பலனளிக்கும் வகையில் உள்ளதால் இந்த பயோ சென்சாரை ரத்ததின் பிளாஸ்மாவில் உள்ள மெத்தைல் கிளையாக்சால் அளவை கண்டுப்பிடிக்கக்கூடிய ஒரு கருவியாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க சாஸ்த்ரா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story