பள்ளி ஆசிரியையிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

உடன்குடியில் பள்ளி ஆசிரியை கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறித்துசென்ற மர்ம நபரை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை புதுத்தெருவை சேர்ந்தவர் ஜான் சுந்தர்ராஜ். இவர் தாண்டவன்காடு வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி (வயது 52). இவர் உடன்குடியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர் முககவசம் அணிந்தவாறு வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளார். பின்னர் வசந்தி துணி துவைத்துக் கொண்டிருந்த பகுதிக்கு மெதுவாக சென்ற அவர், திடீரென்று வசந்தி கழுத்தில் கிடந்த 7½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார். உடனே வசந்தி ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். ஆனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்மநபர் இருளில் ஓடி தப்பி விட்டார். பறிபோன சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்தார். மேலும் வசந்தியின் வீட்டில் உள்ள கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீடு புகுந்து ஆசிரியையிடம் தாலிச்சங்கிலியை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story