கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் பெண் மனு


கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்-கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் பெண் மனு
x
தினத்தந்தி 3 July 2021 6:09 PM GMT (Updated: 3 July 2021 6:09 PM GMT)

சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் பெண் மனு கொடுத்தார்.

மானாமதுரை,

சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் பெண் மனு கொடுத்தார்.

கட்டுமான நிறுவனம்

மானாமதுரை அருகே உள்ள டி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்வரன்(வயது 35). இவரது மனைவி சவுந்தரம் (25). இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் (5).யோகேஸ்வரன் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார்.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பணியில் இருந்த போது அவர் தவறி விழுந்து இறந்தார். அங்கிருந்தவர்கள் இது குறித்து ராஜேஸ்வரனின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் வேலை செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களும் கணவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் அவர் தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும், உரிய இழப்பீட்டுத்தொகை வழங்குமாறும் கேட்டதற்கு கம்பெனி நிர்வாகத்தினர் சரியான பதில் அளிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் மனு

இது குறித்து அவர் மானாமதுரை தாசில்தார் தமிழரசன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோரிடமும் தனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்து உள்ளார். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.
இதற்கிடையே இளையான்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று ஆய்வுக்கு வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் சவுந்தரம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் சவுதி அரேபியாவில் எனது கணவர் இறந்து ஒரு மாத காலம் ஆகியும் அவரது உடலை பார்க்க முடியாமல் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். எனவே தமிழக அரசும், தாங்களும் உடனடியாக இதில் தலையிட்டு தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Tags :
Next Story