மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில்1,412 கோவில்களை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு + "||" + Work to clean up 1412 temples

சேலம் மாவட்டத்தில்1,412 கோவில்களை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில்1,412 கோவில்களை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
சேலம் மாவட்டத்தில் உள்ள 1,412 கோவில்களில் சுத்தப்படுத்தும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம்
நாளை கோவில்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு ஏற்றவாறு காலமுறை பூஜை மட்டும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு குறைவு காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நாளை (திங்கட்கிழமை) முதல் கோவில்களுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1,412 கோவில்கள் உள்ளன. அரசின் உத்தரவை தொடர்ந்து இந்த கோவில்களை நேற்று சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
கிருமிநாசினி தெளிப்பு
கோவில்களில் தூண்கள், தரைகள் உள்ளிட்டவைகள் தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்திருந்தாலும் அவைகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் அனைத்து கோவில்களிலும் எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான சுகவனேசுவரர், கோட்டை மாரியம்மன், கோட்டை பெருமாள், ராஜகணபதி ஆகிய கோவில்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
சமூக இடைவெளி
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் உள்ள 1,412 கோவில்களை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து வரவேண்டும். மேலும் அவர்கள் கோவிலுக்குள் நுழையும் போது கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர முக்கியமாக சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குமரியில் கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
வழிபாட்டு தலங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கோவில்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.