மாவட்ட செய்திகள்

அனகாபுத்தூரில் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருட்டு + "||" + Theft of books to break the lock of a government school in Anakaputhur

அனகாபுத்தூரில் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருட்டு

அனகாபுத்தூரில் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருட்டு
அனகாபுத்தூரில் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருடிய மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாாித்து வருகின்றனர்.
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பள்ளி பூட்டி கிடக்கிறது.

இந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்ய பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று பள்ளியை தலைமை ஆசிரியை திறந்து பார்த்த போது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் 6-ம் வகுப்பு பாட புத்தகங்கள் 140 திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாாித்து வருகின்றனர்.