மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ராகுல்காந்தி(வயது 25). இவர் ஒரு தனியார் சிமெண்டு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த ராகுல்காந்தி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ராகுல்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார், ராகுல்காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story