இந்து மகா சபா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் இந்து மகா சபா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
அகில பாரத இந்து மகாசபா கட்சி சார்பில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து கோவில் சொத்துக்கள் மாற்று மதத்தினரால் பட்டா மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும், இந்து கோவில் சொத்துக்களை இந்துக்களுக்கே அனுபவம் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சிவா, நகர இளைஞரணி தலைவர் அன்பு என்ற பாஸ்கர், துணைத்தலைவர் காளி செல்வம், கடையநல்லூர் நகர தலைவர் அருணாச்சலம், செயலாளர் பாலா, செயற்குழு உறுப்பினர் அய்யப்பன், புளியங்குடி நகர செயலாளர் சுதன், ஒன்றிய செயலாளர்கள் சேதுபதி, வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story