வாலிபர் தீக்குளிக்க முயற்சி


வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 5 July 2021 11:48 PM IST (Updated: 5 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். 
தீக்குளிக்க முயற்சி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வாலிபர் ஒருவர் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி  மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
பணி நிரந்தரம்
விசாரணையில் அவர் நீடாமங்கலம் தென்கரைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன்(வயது29) என்றும் கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணி புரிந்து வந்ததாகவும் தற்போது பணி நிரந்தரம் செய்யப்படும் நிலையில் தனக்கு பதிலாக வேறு ஒருவர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டதால்  மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் பூபாலனை திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story