கோடநாடு கொலை வழக்கு 20-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
கோடநாடு கொலை வழக்கு விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகிய 2 பேர் மற்றும் ஜாமீனில் உள்ள 8 பேர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Related Tags :
Next Story