வடகாடு அருகே 300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்


வடகாடு அருகே 300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
x
தினத்தந்தி 10 July 2021 10:53 PM IST (Updated: 10 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

வடகாடு அருகே 300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

வடகாடு, ஜூலை.11-
வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் கருக்காகுறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கருக்காகுறிச்சி கீழத்தெரு வேட்டை அழகர் கோவில் எதிரே உள்ள முட்புதரில் 300 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வடகாடு அருகே புள்ளான்விடுதி டாஸ்மாக்கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற சேதுராமன் (82) என்பவரை வடகாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11  மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மணமேல்குடி அடுத்த அத்தாணி பகுதியில்மது விற்ற அதே பகுதியை சேர்ந்த தங்கவேல்,கரகத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 104  மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story