வேலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் ரெயில்வே கேட் ஒருநாள் மூடல்

வேலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி ஒருநாள் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. அந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே கேட் மூடல்
வேலூர் மாவட்டத்தில் தென்னக ரெயில்வே துறையின் மூலம் 8 இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி அந்த இடங்களில் உள்ள ரெயில்வே கேட் ஒருநாள் மட்டும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது போக்குவரத்து மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படும். இதுதொடர்பாக அறிவிப்பு பலகையும், மாற்றுப்பாதையும் வைக்கப்பட உள்ளன.
ஸ்ரீபுரம்-பென்னாத்தூர் ரெயில்வே கேட் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணி முதல் 14-ந் தேதி அதிகாலை 4 மணி வரை மூடப்படும். இதையொட்டி அரியூர் மேம்பாலம் வழியாக அடுக்கம்பாறை செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும். கழிஞ்சூர் -திருமணி லத்தேரி சாலை ரெயில்வே கேட் வருகிற 14-ந் தேதி இரவு 10 மணி முதல் 15-ந் தேதி அதிகாலை 4 மணி வரை மூடப்படுகிறது இந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் வேலூர்-
மங்களூரு செல்லும் சாலை வழியாக குடியாத்தம் சாலையை மாற்றுப்பாதையாக பயன்படுத்த வேண்டும். காட்பாடி-வேலூர் கன்டோன்மென்ட் ரெயில்வே கேட் வருகிற 15-ந் தேதி இரவு 10 முதல் 16-ந் தேதி அதிகாலை 4 மணி வரை மூடப்படும். அந்த சமயத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும்.
மாற்றுப்பாதை அறிவிப்பு
அடுக்கம்பாறை- பென்னாத்தூர் ரெயில்வே கேட் வருகிற 16-ந் தேதி இரவு 10 முதல் 17-ந் தேதி காலை 4 மணி வரை மூடப்படுகிறது. வாகன ஓட்டிகள் சாத்துமதுரை- பென்னாத்தூர் சாலையை மாற்றுப்பாதையாக பயன்படுத்தலாம். ஆற்காடு- கண்ணமங்கலம் ரெயில்வே கேட் வருகிற 17-ந் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை மூடப்படும். அந்த சமயத்தில் ஆரணி சாலை மற்றும் திருவண்ணாமலை சாலை பள்ளிப்பட்டு வழியாக செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும்.
அல்லாபுரம்- வேலூர் ரெயில்வே கேட் வருகிற 19-ந் தேதி இரவு 10 முதல் 20-ந் தேதி அதிகாலை 4 மணி வரை மூடப்படுகிறது. வேலூர் ரவுன்டானா அருகே உள்ள மேம்பாலம் வழியாக கஸ்பா சாலையை மாற்றுப்பாதையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
கணியம்பாடி-வேலூர் ரெயில்வே கேட் வருகிற 20-ந் தேதி இரவு 10 மணி முதல் 21-ந் தேதி அதிகாலை 4 மணி வரை மூடப்படும். அந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் சாத்துமதுரையில் இருந்து பென்னாத்தூர் செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும்.
வசந்தபுரம்- வேலூர் ரெயில்வே கேட் வருகிற 21-ந் தேதி இரவு 10 முதல் 22-ந் தேதி அதிகாலை 4 மணி வரை மூடப்படுகிறது. வாகன ஓட்டிகள் வேலூர் ரவுன்டானா அருகே உள்ள மேம்பாலம் வழியாக கஸ்பா செல்லும் சாலையை மாற்றுபாதையாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story