நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா 3 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
88 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 788 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45,797 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,885 ஆக அதிகரித்து உள்ளது.
3 பேர் பலி
இதற்கிடையே நேற்று 142 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 44 ஆயிரத்து 602 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 851 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 429 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று நாமக்கல், சேலம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியாகினர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்து உள்ளது
Related Tags :
Next Story