நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பாவூர்சத்திரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்:

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் அருண்சங்கர் முன்னிலை வகித்தார்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன், தென்காசி தொகுதி பொருளாளர் பாலா, தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட் ராஜ், தலைவர் அழகு பாண்டியன், துணை தலைவர்கள் நயினாமுகம்மது, ஹாஜிஅலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story