வெளிநாடு செல்வோருக்கு கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்பூசி


வெளிநாடு செல்வோருக்கு கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்பூசி
x
தினத்தந்தி 11 July 2021 2:42 AM IST (Updated: 11 July 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

மேற்படிப்பு, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு கோவிஷீல்டு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்கள், மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

இதன்படி முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் ஆகி இருந்தால், 2-வது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி கோவையில் ராஜவீதி நகர் நல மருத்துவ மையத்திலும், தாலியூர் அரசு ஆஸ்பத்திரியிலும் வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக பாஸ்போர்ட், விசா பயண டிக்கெட், வேலை அல்லது கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனுமதி கடிதம், ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 

மேற்கண்ட பிரிவினர் முதல் தவணை தடுப்பூசி போட வேண்டும் என்றால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகலாம். கோவை ராஜவீதி நகர் நல மையத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் இதுவரை 188 ஆண்கள் 59 பெண்கள் என மொத்தம் 247 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தாளியூர் அரசு ஆஸ்பத்திரியில் இதுகுறித்த விவரம் பெரும்பாலானோருக்கு தெரியாததால் இதுவரை 10-க்கும் குறைவான நபர்களே தடுப்பூசி போட்டு உள்ளனர். 

Next Story