குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை


குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 July 2021 4:16 AM IST (Updated: 11 July 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை

மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் ஏட்டு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 49). இவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் போலீசாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சரண்யா (38). இவர்களுக்கு தனுஷ் (18) என்ற மகனும், திவ்யதர்ஷினி (16) என்ற மகளும் உள்ளனர். 
கணேசன் 2020-ம் ஆண்டு முதல் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்றும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 
விசாரணை
இதனால் மனவேதனை அடைந்து மதுகுடித்து விட்டு வந்த ஏட்டு கணேசன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கணேசனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 
ஆனால் அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story