குத்தாலம் அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை

குத்தாலம் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்,
குத்தாலம் அருகே உள்ள அரையபுரம் மெயின் ரோடு ராயர்அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது32). லாரி டிரைவர். இவருடைய மனைவி சூர்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகின்றன. 2 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் சூர்யா மீண்டும் கர்ப்பம் அடைந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசன் ரூ.16 ஆயிரத்துக்கு புதிய செல்போன் வாங்கி உள்ளார்.
இதை கண்டித்த சூர்யா வருமானத்துக்கு மீறி செல்போன் தேவையா? என கேட்டதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவனிடம் கோபித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவருடைய தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு மீண்டும் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நிலையில் சூர்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. குடும்ப தகராறில் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story