சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கிணத்துக்கடவு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் ஜிகாவைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரள எல்லை பகுதிகளில் வருவாய்த் துறையினர், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் பகுதி சோதனைச் சாவடியில் தொடர்ந்து கிணத்துக்கடவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பயிற்சி கலெக்டர் சரண்யா, கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா ஆகியோரும் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கேரள மாநிலத்தில் இருந்து கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர், ரங்கே கவுண்டன்புதூர் ஆகிய கிராமங்கள் வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறது. வாகன ஓட்டிகளிடம் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு இல்லை என்றால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
குறிப்பாக கேரள வாகனங்களுக்கு இ-பாஸ் இல்லை என்றால் தமிழகம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வாகனங்களில் வரும்போது அவர்களின் உடல் வெப்பநிலை சுகாதாரத் துறையினர் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் 24 மணிநேரமும் உஷார் நிலையில் உள்ளனர்.
வாகனங்களில் வருகின்ற அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் வாகனங்களில் வரும் பயணிகள் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்க வேண்டும்.
இதுபோன்ற விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்த ஆய்வின்போது உடன் சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் மது கண்ணன் இருந்தார்.
Related Tags :
Next Story