பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து


பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 12 July 2021 10:10 PM IST (Updated: 12 July 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.

பந்தலூர்,

பெரம்பலூரில் இருந்து சேரம்பாடி நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரில் டிரைவர் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததாக தெரிகிறது. பந்தலூர் அருகே நீர்மட்டம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

எனினும் அங்குள்ள மரத்தில் மோதி கார் நின்றதால், மேற்கொண்டு கவிழவில்லை. உடனே அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வெளியே வந்தனர். இதுகுறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story