பாடநூல் கழக தலைவர் நியமனத்துக்கு பா.ஜ.க. கண்டனம்

பாடநூல் கழக தலைவர் நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல்:
பா.ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில் கட்சியின் பெரம்பலூர் பார்வையாளர் இல.கண்ணன், திண்டுக்கல் பார்வையாளர் வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜா, சுரேஷ், பொருளாளர் பிரேம்குமார் உள்பட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் நெசவு தொழிலை மேம்படுத்த மாவட்டத்தில் நெசவு பூங்கா, திருமலைக்கேணி கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், சுதந்திர போராட்ட வீரர் கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு தூண், குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்பட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story