திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை


திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 July 2021 11:49 PM IST (Updated: 14 July 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
திருமணம் ஆகவில்லை
தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு ஜெயசிங் (வயது 29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும் உண்டு. இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் ஜெயசிங் திருமணமாகாத ஏக்கத்தில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். மேலும் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜெயசிங் தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.
தற்கொலை
இதனால் உறவினர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு ஜெயசிங் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெயசிங் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திருமண ஏக்கத்தில் ஜெயசிங் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story