கரூரில், கொரோனா தடுப்பூசி முகாம்


கரூரில், கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 15 July 2021 12:36 AM IST (Updated: 15 July 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

கரூரில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அந்தவகையில் நேற்று கரூரில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயனூர் பகவதியம்மன் கோவில் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 4 முகாம்களில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story