மைசூருவில் ஓட்டல் ஊழியரை நடிகர் தர்ஷன் தாக்கினார் - இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார்


மைசூருவில் ஓட்டல் ஊழியரை நடிகர் தர்ஷன் தாக்கினார் - இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 16 July 2021 2:06 AM IST (Updated: 16 July 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் ஓட்டல் ஊழியரை நடிகர் தர்ஷன் தாக்கினார் என்று இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

  கன்னட திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சமரச பேச்சுவர்த்தை

  மைசூருவில் உள்ள சந்தேஷ் பிரின்ஸ் ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் ஊரடங்கின்போது நடிகர் தர்ஷன் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். நள்ளிரவு வரை அவர் தனது நண்பர்களுடன் இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தலித் சமூகத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கங்காதர் என்பவரை தர்ஷன் தாக்கியுள்ளார். அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அருண்குமாரி விவகாரத்தில் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு நடிகர் தர்ஷன் அழைத்துள்ளார். எதற்காக அவரை அழைத்தார் என்பது தெரியவில்லை.

  ரூ.25 கோடி மோசடி விவகாரத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பெண் மூலம் பல்வேறு தொழில் விவகாரங்களை நடத்த தர்ஷன் திட்டமிட்டிருந்தார். சாமானிய மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அருணாகுமாரியை தர்ஷன் தனது பண்ணை வீட்டில் வைத்து தாக்கியுள்ளார். இந்த விஷயத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.

பயப்பட மாட்டேன்

  இந்த விஷயத்தில் அருணாகுமாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. கர்நாடக அரசின் விவசாயத்துறை தூதராக இருக்கும் தர்ஷன், துண்டித்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். ஒரு நடிகராக அவர் இவ்வாறு பேசுவது சரியல்ல. நான் பெரிய நடிகர்களை விமர்சித்துள்ளேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ரசிகர்கள் படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும். அதை விடுத்து மிரட்டல் விடுப்பது என்பது சரியல்ல.

  நடிகர் தர்ஷன் தனது பண்ணை வீட்டின் காவலாளியையும் தாக்கினார். இதனால் அந்த காவலாளி வேலையை விட்டு சென்றுவிட்டார். தவறை மூடிமறைக்க தர்ஷன் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார். எத்தனை பேரை தான் அவர் தாக்குவார். மைசூருவில் ஓட்டலில் ஊழியர் தாக்கப்பட்டது குறித்து அதன் உரிமையாளர் சந்தேஷ் நாகராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த ஊழியர் தானாகவே வேலையை விட்டுவிட்டார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
  இவ்வாறு இந்திரஜித் லங்கேஷ் கூறினார்.

Next Story