சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது


சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 18 July 2021 5:44 PM IST (Updated: 18 July 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


ஆண்டிப்பட்டி:
கடமலைக்குண்டு அருகே உள்ள தும்மக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது23). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு 16 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கர்ப்பமடைந்த சிறுமி பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். அப்போது டாக்டர்கள், சிறுமியிடம் வயதை கேட்டபோது அவர் 17 வயது என கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு இளம் வயதிலேயே திருமணம் முடிந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை திருமணச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.


Next Story