விழுப்புரத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை பஸ் நிலையம் வெள்ளக்காடானது

விழுப்புரத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் புதிய பஸ் நிலையம் வெள்ளக்காடானது.
விழுப்புரம்,
விடிய, விடிய மழை
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.
குறிப்பாக விடியவிடிய பெய்த மழையால் தண்ணீர் புகுந்ததால் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் பஸ் நிலைத்துக்கு வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
தண்ணீரை அகற்ற நடவடிக்கை
இதுபற்றிய தகவல் அறிந்த கலெக்டர் மோகன் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ்நிலைய வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீரை உடனடியாக அகற்றவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்திக்கு உத்தரவிட்டார்.
மேலும் பயணிகள் நலன்கருதி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதோடு, கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக தூர்வாரி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் பராமரிக்கவேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அதேபோல் கீழ்பெரும்பாக்கம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
Related Tags :
Next Story