மதுபான கடையைமூட பொதுமக்கள் வலியுறுத்தல்


மதுபான கடையைமூட பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 July 2021 9:53 PM IST (Updated: 18 July 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

தாமோதரபட்டினம் கிராமத்தில் மதுபான கடையை மூட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொண்டி, 
தாமோதரபட்டினம் கிராமத்தில் மதுபான கடையை மூட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாதுகாப்பு
திருவாடானை தாலுகா வட்டானம் ஊராட்சி தாமோதரபட்டினம் கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கடைக்கு அருகில் உள்ள ஊருணி கரையில் அமர்ந்து மதுப்பிரியர்கள் மது குடிப்பதால் ஊருணிக்கு குளிக்க செல்லும் பெண்களுக்கு  பாது காப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது என்று மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கிராமத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் திருவாடானை தாசில்தாருக்கு கிராமத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தாசில்தார் செந்தில்வேல் முருகன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தடுப்பு
அப்போது ஊருணி மற்றும் ஊருணியில் குளிக்க செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அரசு மதுபான கடையை சுற்றிலும் தற்காலிகமாக தகரத்தால் சுற்றுச்சுவர்அமைக்க உத்தரவிட்டனர்.அதன் அடிப்படையில் மதுபான கடையை சுற்றிலும் தகரத்தால் தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால் கிராமத்தினர் அரசு மதுபான கடையை மூட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story