அரசு பள்ளியில் சேர்த்த ஆசிரிய தம்பதி

அரசு பள்ளியில் சேர்த்த ஆசிரிய தம்பதி
தாராபுரம்
தாராபுரம் ஒன்றியத்தில் 17 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளும், 80 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. 250 ஆசிரியஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 வருடமாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகள் கொடுக்கும் அதிக கட்டண நெருக்கடி, பொருளாதாரச் சிக்கலில் தவித்து வரும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். வசதி படைத்தோரும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சுந்தர்பிரபு மற்றும் வெள்ளகோவில் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஷாலினிபிரபா ஆசிரியத்தம்பதி மகள் தீப்தி ஷாய் பிரிஸ்திகா வயது 5 தனியார் பள்ளியில் யு.கே.ஜிபடித்து வந்தாள். இந்த நிலையில் ஆசிரிய தம்பதி தனது மகளை அலங்கியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தனர்.
-----------------
படம்உள்ளது
====
Related Tags :
Next Story