சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கேரளாவுக்கு தோட்ட தொழிலாளர்களை அனுமதிக்கக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம், போடி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
தற்ேபாது தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 ேடாஸ் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே, தமிழக-கேரள எல்லையில் அனுமதிக்கின்றனர்.
இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை ஏற்றிச் செல்லும் ஜீப் டிரைவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஜீப் டிரைவர்கள், தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர்.
பின்னர் அங்கு இருந்து பைபாஸ் சாலை வழியாக ஊர்வலமாக தாலுகா அலுவலகம் வந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டனர். கொரோனா விதிகளுக்கு உட்பட்டு வாகனத்தில் குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திய தொழிலாளர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி 2-ம் கட்ட டோஸ் தடுப்பூசி செலுத்தி அவர்கள் வேலைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர்கள் மற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் உதயராணியிடம் மனு கொடு்த்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story