முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் சான்று பெற விண்ணப்பிக்கலாம்

கல்லூரிகளில் சேர முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை,
2021-2022 கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இட ஒதுக்கீட்டில் மேற்படிப்பில் சேர விரும்பும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களது குழந்தைகள் முன்னாள் படைவீரர்களுக்கான சார்ந்தோர் சான்றை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதள முகவரியில் விண்ணப்பித்தோ பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழகம், கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் முன்னாள் படைவீரர் இட ஒதுக்கீடு கட்டத்தில் தேர்வு செய்வதுடன் சார்ந்தோர் சான்றின் நகலினை கட்டாயம் இணைத்து அனுப்பவேண்டும். கலந்தாய்வின்போது அசல் சான்றினை எடுத்து செல்ல வேண்டும். கடந்த ஆண்டு பெற்ற சான்றினை பயன்படுத்தக்கூடாது. மேற்படிப்பில் சேரும் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் உரிய விபரத்தை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story