வீரபாண்டி போலீஸ் நிலையம் முற்றுகை


வீரபாண்டி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2021 4:30 PM GMT (Updated: 2021-07-22T22:00:05+05:30)

ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி வீரபாண்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்

.உப்புக்கோட்டை:

வீரபாண்டி பட்டாளம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகாமு (வயது 28). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவரை, வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (22) மற்றும் 3 பேர் சேர்ந்து கம்பியால் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவருக்கு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் மகேந்திரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை கைது செய்யாமல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முத்துகாமுவின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து முத்துகாமுவின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Next Story