சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்


சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 22 July 2021 11:59 PM GMT (Updated: 22 July 2021 11:59 PM GMT)

புன்னம்சத்திரம் பகுதியில் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நொய்யல்
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியில் ஓட்டல், பலகாரம், காய்கறி, மளிகை, துணி, டீ, பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகளை கடைக்காரர்கள் கரூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு பிளாஸ்டிக் கவரில் வாங்கி வரும் பொருட்களை எடுத்துக்கொண்டு பிளாஸ்டிக் கவர்களையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். 
 அதேபோல் அழுகிய காய்கறிகள், இறந்த நாய்கள் மற்றும் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் சேகரிக்கப்பட்டு வரும் மருத்துவக் கழிவுகளையும் ஆங்காங்கே தூக்கி வீசி செல்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
மழை பெய்து வருவதால் அந்தகழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கழிவுகளை அகற்றி, இதனை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வேண்டும் என புன்னம்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story