20 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல்


20 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல்
x
தினத்தந்தி 24 July 2021 10:00 PM IST (Updated: 24 July 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 20 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்

திருப்பூர்
திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 20 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புகையிலைப் பொருட்கள் சோதனை
திருப்பூர் மாநகரப் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை, மாநகர நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர்கள் வெற்றிவேந்தன், வரதராஜன் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டார்கள்.
20 கடைகளுக்கு சீல்
திருப்பூர் குமரன் ரோடு தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை உள்பட மாநகரம் முழுவதும் பெட்டி கடைகள் மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டு 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 20 கடைக்கு அதிகாரிகள் பூட்டி சீல்வைத்தனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடக்கிறது. நேற்று முன்தினம் மாநகரம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்றும் ஞாயிற்றுக்கிழமை சோதனை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
---------------


Next Story