மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர்கள் நன்றி


மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர்கள் நன்றி
x
தினத்தந்தி 25 July 2021 5:08 PM IST (Updated: 25 July 2021 5:08 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர்கள் நன்றி

உடுமலை
ரேஷன் கடைகள் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, நுகர்வோர் வாணிப கழகம் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன்கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கீழ் செயல்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதற்காக உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளின் ஊழியர்கள் உடுமலை குட்டை திடலுக்கு வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அத்துடன் தங்களுக்கு, கடந்த ஆண்டு கொரோனா காலத்திற்கு தினசரி பயணப்படி, சிறப்பு ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

Next Story